தனுஷ்க குணதிலக்கவுடன் இலங்கை வந்த பெண் யார்..!
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதை அடுத்து, தனது சட்டக் கட்டணத்தை வசூலிக்கும் வகையில், அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீது வழக்குத் தொடர உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷக குணதிலக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்கள் காரணமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்திய பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை வந்த பின்னர் குணதிலக்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவருடன் நீதிமன்றத்திற்குச் சென்றபோதும், இலங்கைக்குத் திரும்பிய போதும் உடனிருந்த மர்மப் பெண் யார் என்று கேட்டதற்கு குணதிலகவும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
இருப்பினும் நீங்கள் யாரென நம்புகின்றீர்கள் என ஊடகவியலாளர்களிடம் அவர் வினவியுள்ளார்.
காதலி” என நினைக்கின்றோம்” என ஊடகவியலாளர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து “அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்”.என மீண்டும் பதிலளித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது சட்டக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையில் பெரும்பாலான மக்கள் தம்மை நம்பினாலும், நம்பாமல் இருந்தாலும்; அது அவர்களின் உரிமை என்றும் குணதிலக்க தெரிவித்தார்.
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இந்த இலங்கை கிரிக்கட் வீரரை, குற்றவாளி அல்ல என்று சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
உடலுறவு தொடரும்போது, ஆணுறையை அகற்ற வாய்ப்பில்லை என்பதை ஆதாரங்களாக கொண்டு நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
