யாழில் அயல் வீட்டாருடனான தகராறில் உயிரிழந்த வயோதிபப் பெண்
யாழ். வடமராட்சி நெல்லியடி பகுதியில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த வயோதிபப் பெண்
தனது மகள் வீட்டிலிருந்து தனது வீட்டை பார்ப்பதற்கு சென்ற வயோதிபப் பெண் தனது வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அயல் வீட்டுக்காரர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வயோதிபப் பெண் நேற்று (1) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் அயல் வீட்டுக்காரர் தாக்கியதாக தனது மகளுடன் சென்று முறைப்பாடு செய்து விட்டு வீட்டிற்கு வந்து சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனை
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வயோதிபப் பெண்மணியின் உடற்கூற்றுப் பரிசோதனை இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல் |