உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த நாளில், நியூயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச்சில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 சதவீதம் அதிகரித்து 4,612 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் வெள்ளியின் விலை சுமார் 5 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 84 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் சந்தை நிலவரம்
லண்டன் சந்தையில், தங்கத்தின் விலையும் 4,600 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சுமார் 2 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேபோல், லண்டன் சந்தையில் வெள்ளியின் விலை கணிசமாக அதிகரித்து 84 டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam