வங்கி மற்றும் நிதி விபரங்கள் - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொது மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி மற்றும் நிதி தொடர்பான விபரங்களையோ எவருக்கும் பகிர வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் நிதிமோசடிகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களைக் கையாள்வதற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு முழுமையான வசதிகளுடன் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக பொலிஸார் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |