கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில், இந்த வழக்கு இன்று(12.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கை அடுத்த மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளிநபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை தனது சொந்த வங்கிக் கணக்குகளில் வைப்பில் இட்டுள்ளார்.
இந்த ஊழல், மோசடி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி பிரதிவாதிகளுக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri