வடக்கில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியை ஸார்ப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, இதுவரை 37,22,430 சதுரமீற்றர் பரப்பளவில் 80,614 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
குறித்த பணிகள் தொடர்பில் இன்று(12.012026) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெடிப்பொருட்கள் அகற்றும் பணி
இலங்கையின் வடபகுதியில், ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிதியுதவியுடன், மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஸார்ப், ஒரு மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமாகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு, மாங்குளம் மற்றும் கொக்காவில் ஆகிய பகுதிகளிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவு பகுதிகளிலும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதிகளிலும், மொத்தமாக 3,722,430 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 80,614 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக, ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம், இமாங்குளம், கொக்காவில், தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam