இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல்
இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி அதிகரிப்பு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட வரி |
அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள்
இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
369 பொருட்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சு அனுமதி |
இலங்கையில் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட பொருட்களின் முழு விபரம் வெளியானது |