பிள்ளையை முதலையிடம் வீசிய பெண் : இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் (India) கர்நாடகாவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மனைவி பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார்.
குறித்த பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு காணப்படுவதை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையில் தினமும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
கர்நாடகா மாநிலத்திலுள்ள டான்டேலி (Dandeli) என்னுமிடத்தில் வசிக்கும் 26 வயதுடைய சாவித்ரி மற்றும் 27 வயதுடைய ரவி குமார் ஆகிய தம்பதியரின் வினோத் என்ற சிறுவனையே இவ்வாறு கால்வாய்குள் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலைகள் நிறைந்துள்ள கால்வாயில் பிள்ளையைத் தூக்கி வீசிய பின் பிள்ளையின் தாயான குறித்த பெண் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலரிஸார் நீச்சல் வீரர்களுடன் சம்பந்தபட்ட கால்வாயில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பிள்ளை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மறுநாள் காலை, பிள்ளையில் உடல் பாகங்கள் சில தென்பட, ஒரு முதலை பிள்ளையின் உடலுடன் நீந்திச் செல்வதை சிலர் அவதானித்துள்ளனர்.
மேலும் குறித்த தம்பதியர் மீது பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |