ஹட்டன் - வனராஜா பகுதியில் காயங்களுடன் சிறுத்தையின் சடலம் மீட்பு
ஹட்டன் (Hatton) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனராஜா பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது வனராஜா பிரதேசத்திலுள்ள தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று (08.05.2024) மீட்கப்பட்டதாக ஹட்டன் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுத்தை
இதன்போது மீட்கப்பட்ட சிறுத்தை அதிக நீளமுடையது என்றும் சிறுத்தையின் வயிற்றிலும் முதுகிலும் பெரிய காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் கூறியுள்ளார்.
அத்துடன் இரண்டு சிறுத்தைகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் சிறுத்தை பலத்த காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
