அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கி வைப்பு
பாதுகாப்பு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூட்டு முயற்சியில், அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு 650 செயற்கை உறுப்புகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று ராகம ரணவிரு செவன நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டார்.
இதன்போது அவர் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

'எமது நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் நமது துணிச்சலான முப்படை வீரர்கள் செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை., அவர்களில் பலர் சேவையின் போது உயிரிழந்துள்ளதுடன் காயப்பட்டுமுள்ளனர், இருப்பினும் அவர்கள் தொடர்ந்தும் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர். அவர்களின் நலனை பேணுவது நமது பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, இராணுவ அட்ஜுடன்ட் ஜெனரல் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஆனந்த் முகுந்தன் மற்றும் செயற்கை உறுப்பு உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam