ஹொரவ்பொத்தானை காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிக்கவெவ பகுதியை அண்மித்த காட்டுப பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரி அணிந்து இருந்த நிலையில் 55 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் யாருடையது பற்றிய விபரம் தெரியவில்லை எனவும், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு குறித்த பெண்ணின் சடலத்தை பார்வையிடுவதற்கு நீதவான் வருகை தந்திருந்த போதிலும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
