கொழும்பிலிருந்து மோட்டார்சைக்கிளில் பயணித்த தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்
கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதேதிசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது நேர்ந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்
விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
லொறியின் சாரதி கைது
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



