இலங்கை வந்த நெதர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த கதி
களுத்துறைக்கு வருகை தந்த நெதர்லாந்து பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெட்ரோனெல்லா எக்னிடா மரியா என்ற 42 வயதான நெதர்லாந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாட்டாளரிடம் நட்பு ரீதியான பழக்கம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவறான நடத்தை
முறைப்பாட்டாளரான பெண் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தெரிவித்த பொலிஸார், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேகநபர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெண்ணொருவருடன் தவறானமுறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
