அத்துமீறி வீட்டினுள் நுழைந்த குழுவால் சேதப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி
வவுனியாவில் அடையாளம் தெரியாத சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மேலதிக விசாரணை
குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர்.
இதன் போது வீட்டிற்குள் உள்
நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியினை அடித்து சேதப்படுத்தி தப்பிச்
சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam