பாடசாலையில் இருந்து மகளை அழைக்கச் சென்ற இளம் தாய்க்கு நேர்ந்த கதி
கிளிநொச்சி - உருத்திரபுரம் பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கரடிபோக்கு - உருத்திரபுரம் வீதியில் இன்று (25.05.2026) பகல் ஏற்பட்ட வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.
உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்வதற்காக குறித்த பெண் பயணித்துள்ளார்.
இளைஞர்களின் நடவடிக்கை..
இதன்போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இளைஞர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக சென்றதாக சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறிப்பிட்டடுள்ளனர். சம்பவத்தில் விபத்துக்குள்ளான இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.