மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம் - மாத்தளை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று( 2) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம்
மிஹிந்தலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மேற்படி பெண் மீது மோதியதில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மற்றும் பாதசாரி பெண் ஆகியோர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam