ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆயித்தியமலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயித்தியமலை 9ஆம் கொளனி எனும் இடத்தில், பெண் ஒருவர் தனது வீட்டில் கால்போத்தல் அளவு கொண்ட 57 மதுபான போத்தல்களை தன் வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டதன் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam