யாழில் 400 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது!
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் 400 (40 காட்) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (11) பிற்பகல் மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் நேற்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞனிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.




இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
