ஆடையின்றிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய வயோதிப பெண் கைது
ஆணொருவரின் ஆடையின்றிய புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி காசுபறித்த 62 வயதான பெண்ணொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்றைய (05) தினம் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிசாரினால் கைது
பாதிக்கப்பட்ட ஆண் சந்தேக நபரின் அச்சுறுத்தலுக்கு பயந்து சுமார் ஒரு லட்சம் ரூபா வரை அவரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
எனினும் சந்தேக நபரான பெண் தொடர்ந்தும் மிரட்டத் தொடங்கவே பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் சைபர் கிரைம் பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ள பொலிசார், விசாரணைகளின் பின்னர் அவரை குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri