காற்றின் வேகம் அதிகரிக்கும்! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுப்பெற்றுள்ளதால், காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலுமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் கடற்றொழிலில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri