சீனத் தூதரகத்தில் விமல்! புதிய தூதுவர் வெய் ஹுவாஷியாங்கினுடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்கின் விசேட அழைப்பின் பேரில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இலங்கை - சீனா இடையிலான நீண்டகால வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பில் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.
அவதானம் செலுத்தப்பட்ட விடயம்
நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் விமல் வீரவன்சவுடன் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுபுன் அனுருத்த ஜயசிங்கவும் கலந்து கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்