விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல் சார்ந்த விடயமான மாறவிடும் என தமிழ்நாடு சட்டத்தரணி எம் சத்தியகுமார் கூறியுள்ளார்.
பிரத்தியோக நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள கைதுக்கு தமிழக அரசாங்கம் மற்றும் தமிழக வெற்றி கழகமும் பொறுப்பேற்க வேண்டும்.
அரசாங்கத்தின் பொறுப்பு
கூட்டம் என்று வந்தாலே அது அரசாங்கத்தின் பொறுப்பு சார்ந்தது.
ஆகவே விஜய் மாத்திரம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று தமிழ்நாட்டு மாநிலமும் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகமும் கூட பொது போக்குவரத்து பாதையை தவிர்த்து தனிப்பட்ட இடங்களில் கூட்டத்தை நடத்தியிருக்கலாம்.
ஆனால் அவர்களும் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
எனினும் குறித்த விபத்து சம்பவத்துக்கு தமிழக அரசாங்கத்துக்கும் நூறு சதவிகித பொறுப்பு உண்டு” என்றார்.
கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வருகைத்தந்திருந்தார்.
விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒன்பது குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
