பிரித்தானியரை காதை பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிஸார்.. விமானத்தில் சலசலப்பு
லண்டனிலிருந்து ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட விமானத்தில் குடிபோதையில் அடாவடி செய்த பிரித்தானியர் ஒருவரை பிரான்ஸ் பொலிஸார் காதைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த விமானத்தில் பயணித்த பிரித்தானியர்கள் ஐவர், குடிபோதையில் அடாவடி செய்ததுடன் அவர்களில் ஒரு நபர், விமானத்தின் அவசர காலக் கதவைத் திறக்கவும் முயன்றுள்ளார்.
இதனால், விமானம் அவசரமாக பிரான்ஸில் தரையிறக்கப்பட்டது.
கைதட்டிய காணொளி
இதனையடுத்து, விமானத்துக்குள் வந்த பிரான்ஸ் பொலிஸார், அடாவடி செய்தவர்களை விமானத்திலிருந்து வெளியேற்ற முயன்றுள்ளனர்.
Ryanair flight takes emergency landing in Toulouse after stag do start fighting on plane 🤦♂️ pic.twitter.com/P0CwJlmbUm
— UK Fights 🇬🇧 (@krazyukfights) September 28, 2025
அப்போது, ஒருவர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால் பொலிஸார் அவரை காதை பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த பயணிகள் உற்சாகத்துடன் கைதட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



