நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவாரா! அடுத்தடுத்து நிகழப்போகும் அதிரடி சம்பவங்கள்..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 2029ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக வருவார் என்பது அவருடைய கனவு, அவரால் ஜனாதிபதியாக வர முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
அவர் மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளன, பல குற்றச்சாட்டுக்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவாரா? இல்லையா என்பதை நாங்கள் கூற முடியாது, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவர்களுடைய வேலையை செய்வார்கள்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...




