நேட்டோ பிளஸில் இந்தியாவை இணைக்க முயற்சி: ரோ கன்னா
இந்தியாவை நேட்டோ பிளஸ் என்ற வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு தனது 6வது உறுப்பினராக இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை இணைக்கும் முயற்சி
”இந்தியாவை நேட்டோ பிளஸ் அமைப்பின் 6வது நாடாக இணைக்கும் இந்த முயற்சி புதுடில்லியை, அமெரிக்கா பாதுகாப்பு கூட்டணியுடன் மிகவும் நெருக்கமாக்கும்.
அமெரிக்கா ஏற்கனவே அவுஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவுடன் இவ்வாறான உடன்படிக்கைகளை கொண்டுள்ளது. இதில் 6 வது நாடாகவே இந்தியாவை இணைப்பதற்கு தற்போது முயற்சிக்கிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல்
இந்திய-அமெரிக்கா பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பின்னரே இந்த யோசனை செய்தி வெளியாகியுள்ளது. இதேவேளை, நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை துறைமுகம் நோக்கி விரையும் சீன கப்பல்! கடும் குழப்பத்தில் இந்தியா |
“றோ” வின் இரகசிய அறிக்கை!! உஷார் நிலையில் மத்திய அரசு(Video) |