இலங்கை துறைமுகம் நோக்கி விரையும் சீன கப்பல்! கடும் குழப்பத்தில் இந்தியா
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பலினால் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் வரும் நிலையில் இந்தியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.
சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல், சீனாவின் கிழக்கு கடலில் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கை
குறித்த கப்பல் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam