வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வனவிலங்கு அதிகாரிகள்
நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் இன்று (18.12.2023) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர் காவு வண்டி சாரதிகள் வேலை நிறுத்தம்
இதேவேளை, மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி சாரதிகளும் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநரின் இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
