டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் காட்டு தீ! (PHOTOS)
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப் பகுதிக்கு இனம்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் வரை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
மலையக பகுதியில் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் நிலவி வருகிறது. பற்றைக்காடுகள் கருகி போயுள்ளதனால் தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது கடினமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரட்சியான காலநிலையினை அடுத்து மலையக நீர்ப்பாசன பிரதேசங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப் பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகள் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள், பிரதேசத்திற்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் பெறுமதிமிக்க மரக்கன்றுகள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
வரட்சியான காலநிலையினை அடுத்து பல பிரதேசங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
மேலும், நீர்பாசன பிரதேசங்களில் உள்ள காட்டுப் பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
மிருகங்களை வேட்டையாடுவதற்கும் பொழுது போக்குக்காகவும் குறித்த காட்டுப் பகுதிகளுக்கு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே, வனப்பகுதிகளை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மலையகத்தில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு! : தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு (Photos)



சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam