மன்னாரில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
மன்னார் (Mannar) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது.
தொடர்ச்சியாக இக்கிராமத்தில் பல பகுதிகளில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகவும் தாங்கள் வாழ்வாதாரமாக செய்து வருகின்ற தோட்ட செய்கையை அழிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானை வேலி அமைத்து தருமாறு
அவ்வாறே இரவு யானைக்கூட்டம் பல தென்னை மரங்களை அழித்து அவற்றை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.
காட்டு யானைகளினால் தொடர்ச்சியாக இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இக்கிராமத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பரப்புக் கடந்தான் கிராமத்திற்கு ஒரு யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
