மட்டக்களப்பில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் (06.02.2025) அவதானித்ததுடன், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டுள்ளனர்.
யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுவதற்கு..
இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில், தற்போது பகல் வேளையாகவுள்ளது, எனினும், வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர்.

எனவே காட்டு யானைகளை தற்போது விரட்டுவதானது சாத்தியமற்றது.
எனினும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (05.02.2025) இரவு வால்கட்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டங்களையும், தென்னை மரங்களையும் வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளன.
இவ்வாறு காட்டு யானைகளினால் தாம் மிகுந்த மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri