திருகோணமலையில் காட்டு யானைகளின் அட்டகாசம்: கோரிக்கை விடுத்த மக்கள்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் உள்ள நீணாக்கேணி வயல் வெளியில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைக்குள் காட்டு யானைகள் வேளாண்மைகளை சாப்பிட்டு, மிதித்து நாசம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(03.11.2023) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை
காட்டு யானைகளின் தொல்லைகள் அண்மைக் காலமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும், தாம் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு மேற்கொண்ட வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசம் செய்வதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது வேளாண்மைச் செய்கையை பாதுகாக்க அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர முன்வர வேண்டுமென தோப்பூர் - நீணாக்கேணி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
