இலங்கையில் இப்படியும் நேர்மையான மனிதர்கள்.....! வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணம்
இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 இலட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது.
இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமையாளர் ஒருவர் அதனை வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த சந்தன உதயங்க என்ற 38 வயதுடைய நபரே இந்தச் செயலைச் செய்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்! பகிரங்க கோரிக்கை (Video)
5 மில்லியன் பணம்
வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்.களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்பு செய்ய எடுத்துச் சென்ற 50 இலட்சம் ரூபாய் பணம் தரையில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குவியலாக தரையில் விழுந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதுகாப்பு காவலர் ஊடாக வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நேர்மையான செயலை செய்த சந்தன உதயங்கவின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வங்கி முகாமையாளர் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
வீதியில் கிடந்த பணம்
இவ்வாறானவர்கள் சமூகத்தில் அரிதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பணத்தை வைப்பு செய்ய வங்கிக்கு வந்தேன். சைக்கிளை நிறுத்தியதும் எனக்கு தொலைபேசி வந்தது. அந்த அழைப்பிற்கு பதிலளித்துக்கொண்டிருந்த போது வங்கி வளாகத்திற்கு அருகே பணம் கிடந்ததை பார்த்தேன்.
அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன். பின்னரே உரியவர்களிடம் ஒப்படைத்தேன்” என சந்தன உதயங்க தெரிவித்துள்ளார்.