கல்லாற்றில் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட காட்டு யானை
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலில் இருந்து காட்டுயானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
யானையின் உயிரிழப்புக்கான தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும், யானையின் உடலில் வெளிப்படையான காயங்கள் அல்லது களவுக் குறியீடுகள் எதுவும் இல்லாத நிலையில், மரணத்துக்கான காரணத்தை உறுதி செய்ய உடற்கூற்று பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யானை உயிரிழப்பு தொடர்பான சூழ்நிலைகள் மேலும் விசாரிக்கப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
