கொட்டகலை- ரொசிட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு
கொட்டகலை- ரொசிட்ட பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது நேற்றையதினம்(26) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமண நிகழ்வுக்கு செல்லவிருந்த வேளை தனது மகளை தயார் நிலையில் வைத்துவிட்டு சிறுமியின் தாய் தயாராகிக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி வீட்டின் அருகாமையில் இருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுமார் மூன்று மணித்தியா லங்களுக்கு பின்னர் அவர் சடலமாக மீட்க்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக திம்புள்ள -பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam