பாடசாலை பேருந்து ஓட்டுநரை தாக்கிய பெண் உட்பட நால்வர் கைது
ஜூலை 25ஆம் திகதி ஹந்தானை பகுதியில் பாடசாலைபேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 21, 26, 27 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் கண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து ஹந்தானைக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணுக்கு பிணை
விபத்தைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரை ஒரு குழுவினர் தாக்கியுள்ளனர். குறித்த தாக்குதல் காணொளியும் வெளியாகியிருந்தது.
ஆனால், பேருந்து ஓட்டுநர் மீதான தாக்குதலைத் தடுக்க பேருந்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முயற்சித்த போதிலும் அவர் தாக்கப்பட்ட நிலையில், காயமடைந்த ஓட்டுநர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபர்கள் நேற்று (26) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர். பெண் சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஜூலை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
