மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி வீடு சேதம்
மட்டக்களப்பு - பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீடு பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாகவும், கணவன், மனைவி வீட்டினுள் இருந்ததாகவும் உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
[ZVOFIDM ]
மட்டக்களப்பு - கிரான்
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை எல்பி கிராமத்தினுள் இரவு 11 மணிக்கு ஊடுருவிய காட்டுயானை குறித்த வீட்டை ஒன்றை தாக்கியுள்ளது.
இதன்போது வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து நித்திரையில் இருந்த கணவன் மனைவி, உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளதுடன் குறித்த கிராதமத்தில் மீள்குடியேறியுள்ள சுமார் 400 குடும்பங்கள் யானைகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
