அறுகம்பையில் காட்டு யானை தாக்குதல் - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயம்
அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை - சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்துள்ளார்.
நேற்று(28.09.2026) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை
அறுகம்பை மற்றும் சின்ன உள்ளை ஆகிய பகுதிகள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குவதோடு, தினசரி ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

இத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் வருகையும் நடமாட்டமும் அதிகரித்துள்ளமையினால் அப்பகுதியில் பெரும் அச்சநிலை நிலவுகின்றது.
எனவே, அறுகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்தத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan