சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்..! அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Suresh Salley
By Rakesh Jun 15, 2026 02:53 AM GMT
Report

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எனினும் விசாரணை என்ற பெயரில் எவரையும் பழிவாங்கவோ அல்லது கொலை செய்யவோ கூடாது என்றும் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், "பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது, அதனை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும்" எனக் கடந்த காலங்களில் கூறிவந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று அதே சட்டத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இளைஞனின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தொடருந்து ஊழியர்

இளைஞனின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தொடருந்து ஊழியர்

கண்டியில் நேற்று(14.06.2026) நடந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மா அதிபரின் சதி திட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தாக்குதல் நடந்து 7 நாட்கள் கடந்தும் அப்போதைய அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு 'பி' அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

நாட்டில் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் 24 மணித்தியாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்காததால், நீதி அமைச்சராக இருந்த நான் முறைப்பாடளிக்குமாறு எழுத்துமூலமாக அறிவுறுத்தினேன்.

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்..! அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksa Allegations Suresh Salley

அதன் பின்னரே, கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு 'நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் முறைப்பாடளிக்கின்றோம்' எனப் பொலிஸார் அறிவித்தனர்.

எமது ஆட்சிக்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி, 41 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி

இவ்வாறான நிலையில், அப்போதைய சட்டமா அதிபர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருநாளுக்கு முன்னரே, 'குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்' என அறிக்கை விட்டார்.

இது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற முற்பட்ட போது, அவர் நீதிமன்றத்தை நாடி அதற்குத் தடை உத்தரவு பெற்றார்.

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்..! அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksa Allegations Suresh Salley

இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நான் வினவிய போது, “குறித்த சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமாறு கோரினார், அதற்கு நான் இணங்கவில்லை என்பதால்தான் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு குறிப்பிடுகிறார்” என என்னிடம் தெளிவாகக் கூறினார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கைது செய்வதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தது.

பொய்யான வாக்குறுதிகளை அடுக்கிய அநுர

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை பகிரங்கமாக அறிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்றுவரை எந்த உண்மையும் வெளிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்டமூலத்தை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்..! அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksa Allegations Suresh Salley

ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்கு என்று மேடைகளில் முழங்கியவர்கள், இன்று அதே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்.

கடந்த 75 ஆண்டுகால வரலாற்றைச் சாபம் என்று விமர்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த காலங்களை வசைபாடுவதை விடுத்து நாட்டுக்காக என்ன செய்யப்போகின்றார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.  

அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்! வெளியான ஒப்பந்தம்

அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்! வெளியான ஒப்பந்தம்

ஜி7 மாநாட்டில் எகிப்து ஜனாதிபதியை சந்திக்கும் ட்ரம்ப்: சர்வதேச நெருக்கடிகள் குறித்து முக்கிய ஆலோசனை

ஜி7 மாநாட்டில் எகிப்து ஜனாதிபதியை சந்திக்கும் ட்ரம்ப்: சர்வதேச நெருக்கடிகள் குறித்து முக்கிய ஆலோசனை

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US