ஜி7 மாநாட்டில் எகிப்து ஜனாதிபதியை சந்திக்கும் ட்ரம்ப்: சர்வதேச நெருக்கடிகள் குறித்து முக்கிய ஆலோசனை
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் திங்கட்கிழமை தொடங்கவுள்ள ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி ஆகியோர் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக எகிப்து ஜனாதிபதி பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என எகிப்து ஜனாதிபதி அலுவலகம் அதிகார பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அரசியல் நெருக்கடி
தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியப் பதற்றங்கள் உலகளாவிய வர்த்தகம், எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கவுள்ளனர்.