ஆயுதம் வாங்க எதற்காக கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது? நிதியமைச்சரிடம் கேள்வியெழுப்பும் முக்கியஸ்தர்
போர் காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜீர அபேவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் அவர் நான்கு கேள்விகளை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
1. ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது?
2. போர் நடவடிக்கைக்கு நிதி தேவையெனில் நாடாளுமன்றம் ஊடாக பெற்றிருக்கலாம். எனவே, நிதி பெறப்பட்ட வழிமுறைகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியம்.
3. சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆயுதம் வழங்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கிவந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது?
4. வடகொரியாவில் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் எவை? அவை உரியவகையில் தரவுக் கட்டமைப்பில் பதிவு செய்யப்பட்டனவா?
போரின் போது கறுப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்டது என நிதி அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, எம்மால் எழுப்படும் 4 கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் உரிய விளக்கத்தை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri