விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா உடைந்த இரகசியம் - நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கருணா ஒரு நல்ல தளபதி, அவரை வன்னிதலைமைகள் ஓரங்கட்டிவிட்டன என்றெல்லாம் கூறப்பட்டது, தற்போது வரையும் பேசப்படுகின்றது.
ஆனையிறவு வெற்றியின் பின்னர் அவருக்குரிய மரியாதை சரியாக கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்ற திட்டம் கருணாவிடம் மெல்ல மெல்ல துளிர்விட தொடங்கியதாக கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் தேசிய தலைமையிடம் கூறப்பட்ட போதும் தனக்கும் கருணாவுக்குமிடையிலான நல்லுறவை சீர்குலைக்க யாரோ செய்கின்ற சதி வேலையென தேசிய தலைமை கடந்து சென்றுள்ளது.
அதனை தொடர்ந்து கருணாவுடன் இருந்த போராளிகள் தொடர்ந்து அரசியல்மயப்படுத்துகின்ற வேலைகள் இடம்பெறுகின்றன.
பின்னர் புலனாய்வுபிரிவும் இரண்டாக பிளக்கப்பட்டுள்ளது, பொட்டமான் கீழிருந்தவர்கள் கருணாவுடன் செல்கின்றனர்.
இவ்வாறான பல விடயங்கள் 2003 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம்பெறுகின்றது.
அப்போது இது தொடர்பான பூரணமான அறிக்கை மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுதுறைக்கு பொறுப்பாகவிருந்த நீலனால் வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்