வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்

Donald Trump United States of America Crime The White House Gun Shooting
By Shadhu Shanker May 24, 2026 07:19 PM GMT
Report

அமெரிக்காவின் தலைநகர் Washington, D.C.யில் உள்ள வெள்ளைமைாளிகையருகே இன்று(24) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரகசிய சேவை முகவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையினரின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கிச் சூடு

மேலும், அருகில் இருந்த வழிப்போக்கர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (GMT 23:00), 17ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்புக்கு அருகில் சந்தேக நபர் தனது பையிலிருந்து ஆயுதத்தை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக அமெரிக்க இரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப் | Suspect Killed During Shooting Near White House

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த இரகசிய சேவை அதிகாரிகள் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த பதிலடி தாக்குதலில் சந்தேக நபர் குண்டுக்காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சம்பவத்தில் அருகில் நின்றிருந்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.


எனினும், எந்த இரகசிய சேவை அதிகாரிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற வேளையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாக இரகசிய சேவை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்: வான்வெளியை மூடிய ஈரான் - வெளியான அதிரடி அறிவிப்பு

முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்: வான்வெளியை மூடிய ஈரான் - வெளியான அதிரடி அறிவிப்பு

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம்

ஆனால் ஜனாதிபதியின் பாதுகாப்பு அல்லது வெள்ளை மாளிகை செயல்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், CBS வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த சந்தேக நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே அமெரிக்க இரகசிய சேவைக்கு அறிமுகமானவர் என்றும், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு பின்னர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப் | Suspect Killed During Shooting Near White House

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவர் பயன்படுத்திய ஆயுதத்தின் வகை பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

காயமடைந்த வழிப்போக்கர் சந்தேக நபரின் துப்பாக்கிச் சூட்டாலா அல்லது பாதுகாப்பு படையினரின் பதிலடி சூட்டாலா காயமடைந்தார் என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை. சம்பவத்திற்குப் பின்னர் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பல தெருக்கள் உடனடியாக மூடப்பட்டதுடன், ஏராளமான பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். FBI அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப் | Suspect Killed During Shooting Near White House

சம்பவ நேரத்தில் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக 15 முதல் 30 வரை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக வெள்ளை மாளிகைக்குள் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

டிக்கோயா இரட்டை கொலை: தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

டிக்கோயா இரட்டை கொலை: தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

 கடும் பாதுகாப்பு நடைமுறையில்

ABC News நிருபர் செலினா வாங் சமூக ஊடகங்களில் பகிர்ந்த காணொளியில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் “உடனே செய்தியாளர் சந்திப்பு அறைக்கு ஓடுங்கள்” என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் கடும் பாதுகாப்பு நடைமுறையில் இருந்தது. ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அப்பகுதியில் குவிந்திருந்ததாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப் | Suspect Killed During Shooting Near White House

வெள்ளை மாளிகையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (ஜிஎம்டி 00:00) பின்னர் நீக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.

வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க இரகசிய சேவை அமைப்பும் FBIயும் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US