டிக்கோயா இரட்டை கொலை: தம்பதியினரின் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்
ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் பூதவுடல் பலரது கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்தபோது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
இரட்டை கொலை
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்துவதற்கு முன்பு ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் உள்ள தடயவியல் வைத்திய அதிகாரியிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர், பெண்மணி அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை விசாரணைகளின் பின்னர் உறுதியானதையடுத்து மேற்படி வர்த்தக நிலையத்தின் அருகில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் காணுவதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடினர்.
இந்தநிலையில் பொது மக்கள் பொகவந்தலாவை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பொகவந்தலாவை பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர் மறைந்திருந்தமையை கண்டு பொலிஸார் உடனடியாக கைது செய்தனர்.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்
குறித்த சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றோசோ தோட்டத்தில் உள்ள தனது மனைவியின் சகோதரரின் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது மனைவியையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தி பொலிஸ் தடுப்பு காவல் உத்தரவு பெற்று விசாரணை செய்வதற்காக உத்தரவு பெறப்படும் என்றும் ஹட்டன் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து நகைகளும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது கைதான சந்தேக நபர் பதுளை பசறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பொகவந்தலாவை கெம்பியன் பகுதி வீடொன்றில் சிறிது நாட்கள் தங்கியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு குறித்த வர்த்தக நிலையத்துடன் இணைந்திருந்த குடியிருப்பில் வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்ட எஸ். காளிமுத்து சத்திவேல் (85) மற்றும் சகுந்தலாதேவி (82) ஆகியோரின் இறுதிச் சடங்குகள் ஆயிரக்கணக்கான இறைமக்களின் கண்ணீரஞ்சலியோடு (24) ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..



