சிக்கலில் அநுர! எதிர்பாராமல் சூழ்ந்த 2 பெரும் ஆபத்துக்கள்..
இலங்கையில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது.
டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் இலங்கை ரூபாவின் பெறமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அழுத்தத்தில் இருப்பதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலர் வலுப்பெறுதல், இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, மற்றும் வெளிநாட்டு வருமானம் குறைவு ஆகியவை இலங்கையின் நாணய நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் தளத்திலும் புதிய அழுத்தங்கள் உருவாகியுள்ளன.
சமூக வட்டாரங்களில் அதிகரிக்கும் விமர்சனங்கள், அரசாங்க தீர்மானங்களுக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் நிர்வாக சவால்கள் ஆகியவை அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
மக்கள் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு அரசியல் முடிவும் தீவிர கவனத்துடன் பார்க்கப்படுகிறது.
அரசின் எதிர்கால நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார திசையையும், அரசியல் நிலைத்தன்மையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் இந்த புதிய அரசாங்கம் தன்னை இடதுசாரி மரபோடு அடையாளப்படுத்தி கொண்டாலும் அதற்கு நேர் எதிர்மாறாக செயற்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் ஆட்சிதுறை என்பது மேல்நிலை வர்க்கத்தினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri