தாம், ஆணாக பிறந்தவரா? நீதிமன்றம் செல்ல தயாராகும் ஜனாதிபதி ஒருவரின் மனைவி
தாம், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்ற தகவலை வெளியிட்ட செய்தியாளர் ஒருவர் மீது வழக்கு தொடரப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் மனைவி, எச்சரித்துள்ளார்
பிரான்ஸின் ‘பைட்ஸ் எட் டாக்குமெண்ட்ஸ்’ என்ற செய்தித்தாள் ஒன்றில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு செய்தி வெளியானது.
அதில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் (Brigitte Macron),ஒரு ஆணாகப் பிறந்தவர் என்றும், அவரது உண்மையான பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் (Jean-Michel Trogneux) என்றும் கூறப்பட்டிருந்தது.
செய்தியாளரான நடஷா ரே (Natacha Rey) என்பவர், தாம், இந்த விவகாரம் குறித்து மூன்று ஆண்டுகள் விசாரித்து, பல நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு இந்த தகவலை வெளியிட்டதாக கூறி இருந்தார்.
எனினும் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதியன்று யூ-டியூபில் வெளியான அந்த காணொளிச்செய்தி, சில மணித்தியாலங்களில் அகற்றப்பட்டது.
எனினும் அதற்குள் சுமார் 4,70,000 பேர் பார்வையிட்டுள்ளார்கள். டுவிட்டரில் அந்த செய்தி பகிரப்பட்டு, சுமார் 66 ஆயிரம் முறை இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரிஜிட் மேக்ரான் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ
ற்கனவே 2017ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமா குறித்தும் இதுபோன்ற செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


