ஜனாதிபதி தெரிவில் இரட்டை வேடம் போடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் வீட்டுக்குச் சென்றதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் நிலைப்பாடு
வஜிர அபேவர்தனவின் வீட்டுக்கு 6 உறுப்பினர்கள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது.
ஹரீன் வெளியிட்ட தகவல்
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
