கந்தகாடு முகாமில் இருந்து தப்பி ஓடிய 130 பேரும் கைது
வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ தினமான நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50 கைதிகள் தப்பி ஓடியதையடுத்து இரவு 7 மணியளவில் 80 பேர் மீண்டும் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு இரவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரு சம்பவங்களிலும் தப்பி ஓடிய 130 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் எனவே இங்கு இருக்கமுடியாது. தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே இவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகிய சுமார் 500 மேற்பட்ட கைதிகள் புனர்வாழ்வு பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri