இலங்கையின் செயற்பாடு பாராட்டத்தக்கது! - உலக சுகாதார அமைப்பு
கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை பின்பற்றும் முறையைப் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO)பணிப்பாளர் நாயகம், டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார்.
இது உலகிற்கு முன்மாதிரியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட ஈடுபாடு வைரஸைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவைச் சந்தித்த டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.
இலங்கையில் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தியை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியில் மற்ற நாடுகள் முன்னேற உதவுவதற்காக தடுப்பூசியில் இலங்கையின் வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொள்ளுமாறு டெட்ரோஸ் அதானோம் பேராசிரியர் ஜயசுமனவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்இ.