ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடர்: தகுதி பெற்ற அணிகள் விபரம் வெளியீடு
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த தொடரில் நேற்றுடன் தொடர் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையும், 2025ம் ஆண்டு “சாம்பியன்ஸ் கிண்ண ” தொடரும் நடைபெறவுள்ளன.
சாம்பியன்ஸ் கிண்ண தொடர்
இந்நிலையில் 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் “சாம்பியன்ஸ் கிண்ண ” தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது குறித்த தொடருக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளும், தொடரை நடத்துவதால் பாகிஸ்தான் அணியும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் தகுதிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sri Lanka and Netherlands miss out as the 8 teams are now confirmed for the ICC Champions Trophy 2025.#CT25 pic.twitter.com/vi6zEJ9uHl
— Circle of Cricket (@circleofcricket) November 12, 2023
தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கை அணி
அதை தவிர்த்து (பாகிஸ்தானை) புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் “சாம்பியன்ஸ் கிண்ண” தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.
அதன்படி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்காளதேஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மேலும், இலங்கை, நெதர்லாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களை பிடித்ததால் தொடருக்கு தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.