ரணிலின் இன்றைய அறிவிப்புக்காக காத்திருக்கும் ஒட்டுமொத்த அரச ஊழியர்கள்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதன் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை 20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் 20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படாவிடின் வரலாற்றின் மிக மோசமான போராட்டம் ஒன்றிற்கு நாங்கள் செல்ல நேரிடும் என ஐக்கிய தொழிற்சங்க அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், எமது சம்பளம் சிறிதளவேனும் உயர்த்தப்படவில்லை.
மின் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணம் ஆகியவையும் பாரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
எனவே, இந்த வரவு செலவுத்திட்டத்தில் போதிய ஊதிய உயர்வு வழங்கப்படாதவிடத்து போராட்டத்தில் ஈடுபட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர மாட்டார்கள். நாடு மீண்டும் பாதாளத்தில் தள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இன்று முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முன்னர் அரச தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
